படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க - 10
இல்லறம் = நல்லறம்
****************
ஒரு தம்பதி சற்று முன் அவர்களுக்கிடையே நடந்தேறியிருந்த சண்டைக்குப் பின்னர், காரில் பயணித்துக் கொண்டிருந்தனர். இருவருமே தங்கள் பக்கமே நியாயம் இருப்பதாக பிடிவாதமாக நம்பியதால் வெகு நேரம் ஒருவருடன் ஒருவர் பேசவில்லை. சாலையோரத்தில் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த சில ஆடுகளையும், பன்றிகளையும் பார்த்த கணவன், மனைவியிடம் நக்கலாக, 'உன் உறவினரோ?' என்று வினவ, மனைவி ஆத்திரப்படாமல், "ஆம், என் மாமியார் குடும்பத்தினர் !" என்றார் :)
கேள்வியின் நாயகனே
*****************
ஒரு கணவர் ஒரு நாளில் ஆண்களை விட இரு மடங்கு சொற்களை பெண்டிர் பேச்சில் உபயோகிப்பதாக ஓர் ஆய்வுக்கட்டுரையில் எழுதப்பட்டிருப்பதாகக் கூறினார். உடனே, மனைவி, "அதற்குக் காரணம், பெண்கள் தாங்கள் ஆண்களிடம் ஒரு முறை கூறுவதை, திரும்பவும் கூற வேண்டியிருப்பதே!" என்று சொல்ல, கணவர் வினவினார், " என்ன?"
படைப்பின் ரகசியம்
***************
ஒரு கணவர் தன் மனைவியிடம், "ஒரே சமயத்தில், நீ மிக அழகாகவும், அதி முட்டாளாகவும் காணப்படுவது எப்படி என்பது எனக்குப் புரியவில்லை !" என்றதற்கு பதிலாக, மனைவி, "நான் விளக்குகிறேன் ! கடவுள் என்னை அழகாகப் படைத்தது, நான் உங்களைக் கவரவே, அதே நேரம், என்னை முட்டாளாக ஆக்கியது, நான் உங்களால் கவரப்படுவதற்காகவே !" என்றவுடன், கணவர் கப்சிப் :)
எஅ.பாலா
### 254 ###
12 மறுமொழிகள்:
Test !
//கேள்வியின் நாயகனே
*****************
.....கணவர் வினவினார், " என்ன?"//
இது அருமைங்க.
நன்றாக சிரித்தேன்.
ரொம்பக் கஷ்டமாயிருக்குது
;)
Dont share your personal experience in public dude :))))
:)
good one
கேள்வியின் நாயகனே :-)))))))))))
படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க -
ஹா..ஹா...ஹா... :)
நன்மனம்,
நன்றி !
//மிதக்கும் வெளி said...
ரொம்பக் கஷ்டமாயிருக்குது
//
இந்த ரவுசு தானே வேண்டாங்கறது :)
Anonymous,
//
Dont share your personal experience in public dude :))))
//
OK, Thanks for the advice, pal ;-)
சிவமுருகன்,
நன்றி !
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
கேள்வியின் நாயகனே :-)))))))))))
//
KRS,
ஜோக்குக்கும் தலைப்பு முக்கியம் இல்லையா ? நன்றி :)
//
Dharumi said...
படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க -
ஹா..ஹா...ஹா... :)
//
புரொபஸர் சார்,
என்ன, இப்டி வில்லன் (அசோகன்!) சிரிப்பு சிரிக்கிறீங்க ;-) நன்றி.
Post a Comment